சுவிட்சர்லாந்தில் 18 வயதிலிருந்து மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும். ஒரே பாலின ஜோடிகளும் திருமணம் செய்து கொள்ளலாம்: ஒரு ஆண் ஒரு ஆணை திருமணம் செய்து கொள்ளலாம் மற்றும் ஒரு பெண் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம். நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், நீங்கள் Basel-Stadt மாநிலத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தில் (Zivilstandsamt) பதிவு செய்ய வேண்டும். பின்னர் சார் பதிவாளர் அலுவலகம் 'திருமண தயாரிப்பு நடைமுறையைத்' தொடங்குகிறது. இந்த நடைமுறை மூலம் திருமணம் தயார் செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக மணமக்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்களா என்பதை அலுவலகம் சரி பார்க்கிறது. செயல்முறை முடிந்ததும், நீங்கள் 3 மாதங்களுக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இந்த நடைமுறை எவ்வாறு செயல்படுகிறது மற்றும் இதற்கு உங்களுக்கு எந்தெந்த ஆவணங்கள் தேவைப்படும் என்பதைச் சார்பதிவாளர் அலுவலகம் உங்களுக்குத் தெரிவிக்கும்.
ஒருவேளை ஒரு துணைவர் இன்னும் வெளிநாட்டில் இருக்கிறார் எனில் நீங்கள் உங்கள் துணைவர் சுவிட்சர்லாந்துக்குள் நுழைய அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் (திருமண ஏற்பாடு). அதன்பின் நீங்கள் இருவரும் சுவிட்சர்லாந்தில் திருமணம் செய்துக் கொள்ளலாம்.
ஒருவேளை நீங்கள் போலித் திருமணத்தில் (Scheinehe) நுழைகிறீர்கள் என்ற ஒரு சந்தேகம் சார் பதிவாளர் அலுவலகத்திற்குத் தோன்றலாம். போலித் திருமணம் என்றால்: நீங்கள் திருமணம் செய்து கொள்வதின் மூலம் துணைவர் ஸ்விட்சர்லாந்தில் வசிக்க முடியும் என்ற ஒரே காரணத்திற்காக திருமணம் செய்து கொள்வது. சார்பதிவாளர் அலுவலகம் இந்தத் திருமணத்தை ஏற்க மறுக்கலாம். நீங்கள் ஏற்கனவே திருமணம் செய்திருந்தால் அலுவலகம் இந்தத் திருமணம் செல்லாது என்றும் அறிவிக்கலாம். எனில் இந்த திருமணம் மீண்டும் கலைக்கப்படும். அல்லது ஒருவேளை நீங்கள் போலித் திருமணத்தின் விளைவாக உங்கள் குடியிருப்பு அனுமதியையும் இழக்க நேரிடும்.