பிறப்பைப் பதிதல்
ஒவ்வொரு குழந்தையின் பிறப்பையும் நீங்கள் பதிவாளர் அலுவலகத்தில் (Zivilstandsamt) பதிவு செய்ய வேண்டும். எச்சரிக்கை: உங்கள் குழந்தை பிறந்த இடத்தில் உள்ள பதிவு அலுவலகத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். எனவே நீங்கள் வசிக்கும் நகராட்சி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
குழந்தை மருத்துவமனையில் பிறக்கிறது:
மருத்துவமனை ஆவணங்களைப் பதிவாளர் அலுகத்திற்கு அனுப்புகிறது. இனி நீங்கள் இதைப்பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.
குழந்தை மருத்துவமனையில் பிறக்கவில்லை:
நீங்கள் வீட்டில் அல்லது வேறு எங்காவது உங்கள் குழந்தையைப் பெற்றிருக்கிறீர்கள். அப்படியானால் நீங்களே தான் பதிவாளர் அலுவலகத்தில் பிறப்பைப் பதிவு செய்ய வேண்டும். இதைச் செய்ய உங்களுக்கு மூன்று நாட்கள் உள்ளன. நீங்கள் எந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதைப் பதிவாளர் அலுவலகம் உங்களுக்குத் தெரிவிக்கும்.
தெரிந்து கொள்வது நல்லது:
ஒரு குழந்தை சுவிட்சர்லாந்தில் பிறப்பது மூலமாக அது சுவிட்சர்லாந்தின் குடிமகனாகவோ அல்லது குடிமகளாகவோ ஆக முடியாது. அது தானாகவே சுவிஸ் குடியுரிமையைப் பெற முடியாது