மோதல்

உங்கள் கூட்டு வாழ்க்கையில் அல்லது குடும்பத்தில் உங்களுக்கு மோதல்கள் மற்றும் சண்டைகள் உள்ளதா? எனில் பல்வேறு ஆலோசனை மையங்கள் உங்களுக்கு மேற்கொண்டு உதவும். குடும்பத்தில் மற்றும் துணைவர்களுக்கு இடையே வன்முறை தடை செய்யப்பட்டுள்ளது. "Hallo Basel-Stadt"இல் குடும்ப வன்முறை பற்றிய ஒரு தனி அத்தியாயமே உள்ளது. அங்கு நீங்கள் இத்தலைப்பில் கூடுதல் தகவல்களைக் காணலாம்.

சேர்ந்து வாழ்பவர்களிடையே மோதல்

உங்கள் கூட்டு வாழ்க்கையில் உங்களுக்குப் பிரச்சனைகள் இருந்தால் நீங்கள் நிபுணர்களிடமிருந்து உதவி பெறலாம் (திருமண ஆலோசனை, Eheberatung). உங்களுடன் இணைந்து தீர்வுகளைக் கண்டறிய சிறப்பு ஆலோசனை மையங்கள் உள்ளன. பெரும்பாலும் முதல் கலந்துரையாடல் இலவசம் அல்லது அதற்குக் குறைவான கட்டணம் செலுத்த வேண்டும்.

குடும்பத்திற்குள் மோதல்

உங்களுக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள் எனில் சில நேரங்களில் இது கடினமான சூழ்நிலைகளைக் கொடுக்கலாம். இது ஒரு பெற்றோராக உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் மேற்கொண்டு எப்படி செல்வது என்று தெரியவில்லை என்றால் உதவி பெறுவது சிறந்தது.

பெற்றோருக்கான உதவி:

  • குடும்ப ஆலோசனை மையத்தில் (Familienberatungsstelle) தனிப்பட்ட ஆலோசனைகளைப் பெறலாம்.
  • உங்களுக்கு வளர்ப்பைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது உங்கள் குழந்தைகளைப் பற்றி ஏதேனும் கவலைகள் இருந்தால் நீங்கள் பெற்றோர் அவசர தொலைபேசி எண்ணில் 0848 35 45 55 தொடர்பு கொள்ளலாம் (சாதாரண தொலைபேசி கட்டணத்தைச் செலுத்துவீர்கள்) அல்லது மின்னஞ்சல் மூலம் நிபுணர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறலாம்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு:

  • குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் குழந்தைகளுக்கான அவசரகால ஹாட்லைனை அழைக்கலாம், மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி எழுதலாம் அல்லது அரட்டையடிக்கலாம். தொலைபேசி: 147 (அழைப்பு இலவசம்).

வீட்டில் வன்முறை

குடும்பத்தில் வன்முறை அதிகாரப்பூர்வமாகக் குற்றம் மேலும் அது தடை செய்யப்பட்டுள்ளது. ஒருவர் வன்முறையைக் கையில் எடுத்தால், அவர் தண்டனைக்குரியவர் ஆகிறார். எந்த விதமான வன்முறையும் தடைசெய்யப்பட்டுள்ளது.குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு எதிராக யாரும் வன்முறையைப் பயன்படுத்தக்கூடாது: மனைவி, கணவன் அல்லது குழந்தைகளுக்கு எதிராக அல்ல. குடும்ப வன்முறை பற்றி அதிகாரிகள் அறிந்தால், அவர்கள் செயல்பட வேண்டும்.

உங்கள் குடும்பத்தில் நீங்கள் வன்முறையை அனுபவிக்கிறீர்களா? நீங்கள் ஆதரவைப் பெறக்கூடிய சலுகைகள் உள்ளன. சலுகைகள் இலவசம் மற்றும் நம்பிக்கைக்குரியது.

  • Frauenhaus / Väterhaus: பெண்கள் அல்லது ஆண்கள் வன்முறையை அனுபவித்தால், அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பெண்கள் தங்குமிடம் அல்லது ஆண்கள் தங்குமிடம் செல்லலாம். அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் அங்கு புகலிடம் தேடலாம். பெண்கள் இரவும் பகலும் பெண்கள் தங்குமிடத்தை அழைக்கலாம். தொலைபேசி: 061 681 66 33.
  • குழந்தைகளுக்கான அவசர எண்: குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் குழந்தைகளின் அவசர எண்ணை அழைக்கலாம். அழைப்பு இலவசம். தொலைபேசி: 147.
  • உங்கள் குடும்பத்தில் ஒருவரால் நீங்கள் அச்சுறுத்தப்படுவதாக உணர்கிறீர்களா? எனில் காவல்துறையை அழைக்கவும். தொலைபேசி: 117. காவலர் குற்றவாளியை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அல்லது வீட்டிலிருந்து நீண்ட காலத்திற்கு வெளியேற்ற முடியும். அதன் பிறகு குற்றவாளி அபார்ட்மெண்ட் அல்லது வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.

"Hallo Basel-Stadt" குடும்ப வன்முறை பற்றிய அதன் தனி அத்தியாயத்தைக் கொண்டுள்ளது. அங்கு நீங்கள் இத்தலைப்பில் கூடுதல் தகவல்களைக் காணலாம்.