பெற்றோராயிருத்தல்

இதைத் தவிர ஒரு குழந்தையை வளர்ப்பது எளிதானது அல்ல. உங்கள் குழந்தைக்கு எது நல்லது என்று நீங்கள் சில சமயங்களில் யோசிக்கலாம். இதைப் பற்றி மற்ற பெற்றோருடன் பேசுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல்வேறு ஆலோசனை மையங்களும் உங்களுக்கு உதவலாம்.

சந்திக்குமிடங்கள்

தாய்மார்கள் மற்றும் தந்தைகளுக்குப் பல சலுகைகள் உள்ளன. இங்கே நீங்கள் மற்ற பெற்றோருடன் பேசலாம் அல்லது உங்கள் குழந்தையுடன் சேர்ந்து ஏதாவது செய்யலாம்.

  • குறுநடை போடும் குழந்தைகள் குழுக்கள் (Krabbelgruppen) சிறு குழந்தைகள் மற்றும் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கானது. இங்கே நீங்கள் மற்ற பெற்றோரை சந்திக்கலாம்.
  • பெற்றோர் குழந்தை உடற்பயிற்சி சிறு குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கானது. அவர்கள் ஒன்றாக விளையாடலாம்,உடற்பயிற்சி செய்யலாம் மற்றும் வேடிக்கையாக இருக்கலாம். பெரும்பாலான நகராட்சிகள் ஜிம்னாஸ்டிக்ஸ் வழங்குகின்றன.
  • உள்ளூர் சந்திப்பிடங்கள் (Quartiertreffpunkte) பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களை வழங்குகின்றன.
  • நூலகங்கள் மற்றும் பொம்மையகங்களில் சிறிய மற்றும் பெரிய குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கான சலுகைகள் உள்ளன.

பெற்றோர் கல்வி

Basel-Stadt இல் பெற்றோர்களுக்கான பல்வேறு தலைப்புகளில் படிப்புகள் உள்ளன. புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு படிப்புகளும் உள்ளன. உதாரணமாக, சுவிஸ் பள்ளி அமைப்பைப் பற்றிய படிப்புகள் உள்ளன. சில படிப்புகள் மற்ற மொழிகளிலும் உள்ளன.

வளர்ப்பு பற்றிய ஆலோசனை

உங்கள் குழந்தைகளின் வளர்ப்பு பற்றி உங்களுக்கு கேள்விகள் இருந்தால், பல்வேறு ஆலோசனை மையங்கள் உதவும்.

உதாரணமாக, உங்களுக்கு 5 வயது வரை குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகள் இருந்தால், நீங்கள் பெற்றோரா ஆலோசனை(Elternberatung) செல்லலாம்.

அவசர கேள்விகளுக்கு பெற்றோர் அவசர எண்ணை அழைக்கலாம். இங்கே நிபுணர் ஆலோசனை பெறுவீர்கள். நீங்கள் அழைக்கும் போது சாதாரண தொலைபேசிக்கான கட்டணத்தையே செலுத்துவீர்கள். தொலைபேசி: 0848 35 45 55. அல்லது நீங்கள் மின்னஞ்சல் எழுதலாம். நீங்கள் www.elternnotruf.ch இல் முகவரியைக் காணலாம்.