உயர்தனி டொச் மொழி / சுவிஸ் டொச் மொழி
சுவிட்சர்லாந்தில் நான்கு தேசிய மொழிகள் உள்ளன: டொச், பிரெஞ்ச், இத்தாலி, ரெட்ரொமானிஷ். Basel-Stadt மாநிலத்தில் ஜெர்மன் அதிகாரப்பூர்வ மொழி. உயர் டொச் மற்றும் சுவிஸ் டொச் உள்ளது.
- உயர்தனி டொச் (Standarddeutsch)
டொச் மொழி பேசும் சுவிட்சர்லாந்தில் உள்ளவர்கள் உயர்தனி டொச் எழுதுகிறார்கள். அவர்கள் பள்ளியிலும் சில சமயங்களில் வானொலி மற்றும் தொலைக்காட்சியிலும் கூட உயர்தனி டொச் பேசுகிறார்கள். - சுவிஸ் டொச் (Schweizerdeutsch)
அன்றாட வாழ்வில் மக்கள் பெரும்பாலும் சுவிஸ் டொச் பேசுகிறார்கள். நீங்கள் ஏற்கனவே நன்றாக டொச் பேசுபவராயினும், சுவிஸ் டொச் உங்களுக்குப் புரிந்து கொள்வது கடினம். ஏதாவது புரியவில்லையா? எனில் மக்களை நீங்கள் உயர்தனி டொச் மொழியைப் பேசுமாறு கேட்கத் தயங்க வேண்டாம். நீங்களும் பேச வேண்டியது இல்லை. ஆனால் சிறிது காலம் கழித்து நீங்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
இடது, தொடர்பு
Swissworld / மேலதிக தகவல்கள் (DE)