ஒருங்கிணைப்பு (உள்வாங்குதல்) வசதி

பள்ளியில், தொழிற்பெயர்ச்சியில் மற்றும் வேலையில் நீங்கள் சிறந்த முறையில் உங்களை ஒருங்கிணைக்க முடியும். ஆனால் உங்களுக்கு இன்னும் வேலையோ கல்வியோ இல்லை. மேலும் நீங்கள் இன்னும் பள்ளிக்கூடத்திற்கு செல்லவில்லை. எனில் நீங்கள் ஒருங்கிணைப்புக்கு பல்வேறு சலுகைகளைப் பயன்படுத்தலாம் .

குறிப்பிட்ட வசதிகள்

பாசில் மாநிலத்திற்குப் புதிதாகக் குடியேறுபவர்களுக்குக் குறிப்பாக பல சலுகைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, பேச்சுச் சுற்றுகள், ஓய்வு நேரம், விரிவுரைகள் அல்லது படிப்புகளுக்கான சலுகைகள். இந்தச் சலுகைகள் நீங்கள் மக்கள் குடியேறவும் மக்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் வருகின்றன. "GGG Migration" ஆலோசனை மையம் என்னென்ன சலுகைகள் உள்ளன என்பதைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும்.

கழகங்கள்

சுவிஸ் மக்கள் ஏதேனும் ஒரு கழகத்தில்(Verein) உறுப்பினராக உள்ளனர். விளையாட்டுக் கழகங்கள் அல்லது கலாச்சாரக் கழகங்கள் என பல்வேறு வகையான ஆர்வங்களுக்கான கழகங்கள் உள்ளன. நீங்கள் ஒரு கழகத்தில் சேர்ந்தால், மற்ற மக்களைச் சந்திக்கலாம். பெரும்பாலான கழகங்கள் அனைவருக்கும் திறந்திருக்கும்.

இடம்பெயர்வு நிறுவனங்கள்

புலம்பெயர்ந்தோர் சங்கங்களும் உள்ளன. சங்கங்களின் உறுப்பினர்கள் பொதுவாக ஒரே மொழியைப் பேசுகிறார்கள், அவர்கள் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லது ஒரே மதத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த சங்கங்கள் பெரும்பாலும் சுவிட்சர்லாந்து மற்றும் பாசல்-ஸ்டாட் மாநிலத்திற்குப் புதிதாக வருபவர்களுக்கான சலுகைகளைக் கொண்டுள்ளன. இவை ஒருங்கிணைப்பில் உங்களுக்கு உதவ முடியும்.

இளையவர்களுக்கான வசதிகள்

இளைஞர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் பல சலுகைகளைப் பயன்படுத்தலாம், இங்கு நீங்கள் உங்கள் சக வயதுடைய இளைஞர்களைச் சந்திக்கலாம். இங்கு நீங்கள் ஒரு திட்டப் பணியில் பங்கேற்கலாம் மற்றும் உங்கள் சொந்த யோசனைகளைப் பரிந்துரைக்கலாம். வல்லுநர்கள் இப்பணியில் இளைஞர்களுடன் (Jugendarbeit) இருப்பார்கள். இந்தச் சலுகைகள் பொதுவாக இலவசம்.

சுற்றுப்புற சந்திப்பிடங்கள்

சுற்றுப்புற சந்திப்பிடங்கள் (Quartiertreffpunkte) அனைவருக்கும் திறந்திருக்கும். குடும்பங்கள், வயதானவர்கள் மற்றும் கொஞ்சம் மட்டுமே ஜெர்மன் பேசும் நபர்களுக்கும் இங்கு சலுகைகள் உள்ளன. சில சந்திப்பிடங்கள் குடும்ப மையங்களாக உள்ளன. இங்கு தாய்மார்கள் மற்றும் தந்தைகள் தங்கள் குழந்தைகளுடன் எளிதாகச் சந்திக்கலாம். சுற்றுப்புற சந்திப்பிடங்கள் உங்கள் அன்றாட வாழ்க்கையில் உங்களுக்கு ஆலோசனைகள் மற்றும் ஆதரவைத் தருகின்றது. சுற்றுப்புற சந்திப்பிடங்களில் குடும்பக்கொண்டாட்டங்கள் மற்றும் பிற சந்தர்ப்பங்களுக்கு அறைகளை நீங்கள் வாடகைக்கு எடுக்கலாம்.