கழிவுகளைப்பிரித்தல் / மறுசுழற்சி
கழிவுகளைப்பிரிப்பதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் பணத்தைச் சேமிக்கவும் முடிகிறது. மறுசுழற்சி செய்யக்கூடிய அல்லது சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடிய கழிவுகளை விசேட சேர்க்குமிடங்களில் அல்லது சேர்க்கலாம் (பேப்பர்,பற்றரி, கண்ணாடி, மட்டை, பச்சைக்கழிவுகள், அலுமினியம், உலோகம், துணிகள், எண்ணெய் என்பன) இந்தக்கழிவுகள் வீட்டுக்குப்பைகளுடன் சேராது. ஒவ்வொரு கிராமசபையும் தமக்கென கழிவுகளை அகற்றும் அட்டவணை (Entsorgungsplan) அல்லது கழிவு நாட்காட்டி (Abfallkalender) கொண்டுள்ளது இதை கிராமசபையில் பதிவு செய்யும்போது பெற்றுக்கொள்ளலாம். அதில் எந்தக் கழிவுகளை எங்கே அகற்றலாம் எனப் போடப்பட்டிருக்கும். கழிவுகளை எரிப்பதோ அன்றி வழங்கப்பட்ட இடங்களன்றி வேறு இடங்களில் இறக்கிவைப்பதோ தவிர்க்கப்படவேண்டும். பிளாஸ்ரிக் போத்தல்கள் (PET-Flaschen) மற்றும் வேறு பக்கற் மட்டைகளை எல்லா விற்பனை நிலையங்களிலும் இலவசமாக அகற்றலாம்.