அதிகாரப்பூர்வ பதிவு
Kanton Basel-Stadt மாநிலத்தில் புதிதாக குடி புகும் அனைத்து மக்களும் 14 நாட்களுக்குள் அவர்கள் வசிக்கும் இடத்தில் (Basel, Riehen அல்லது Bettingen) குடியிருப்பாளர் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
நீங்கள் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) உள்ள நாடு அல்லது ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்தில் உள்ள (EFTA) நாட்டைச் சேர்ந்தவர்: நீங்கள் எழுத்துப்பூர்வமாக E-Umzug CH வழியாகவோ அல்லது Basel-Stadt, Riehen அல்லது Bettingenஇல் உள்ள குடியிருப்பாளர் பதிவு அலுவலகத்தில் நேரிலோ பதிவு செய்யலாம்.
நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) உள்ள நாட்டை அல்லது ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்தில் (EFTA) உள்ள நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல எனில்:
ஷ்பீகல்ஹோஃப் வாடிக்கையாளர் மையத்தில் உள்ள குடியிருப்பாளர் பதிவு அலுவலகத்திற்கு (Einwohneramt) வாருங்கள். அங்கு உங்கள் பயோமெட்ரிக் தரவை நாங்கள் சேகரிக்க வேண்டும். பதிவு செய்ய நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
முகவரி இதுதான்:
Kundenzentrum Spiegelhof
Spiegelgasse 6
4001 Basel
Tel. 061 267 70 60
நீங்கள் பதிவு செய்ய என்னென்ன தேவை?
எந்தெந்த ஆவணங்களை உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளவும்.
ஆவணங்கள் ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன் அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.
உங்களுக்கு நிச்சயமாக இந்த ஆவணங்கள் தேவைப்படும்:
- பதிவுப் படிவம் (Anmeldeformular). நீங்கள் முன் பதிவுப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
- உங்கள் செல்லுபடியாகும் பயண கடவுச்சீட்டு அல்லது அடையாள அட்டையின் வண்ண நகல் (EU/EFTAக்கு)
- உங்கள் வாடகை ஒப்பந்தம் அல்லது குடியிருப்பு அனுமதியின் நகல்
உங்களுக்கு இந்த ஆவணங்களும் தேவைப்படலாம்:
- விசா நுழைவு அனுமதி
- பணி ஒப்பந்தம்
- குற்றப் பதிவு அறிக்கை
- திருமணச் சான்றிதழ்
- ஒருவேளை இன்னும்
நீங்கள் இந்த மாநிலத்திற்குள் இடம்பெயர்ந்தாலோ அல்லது பாசில்-ஷ்டட் மாநிலத்தை விட்டு வெளியே இடம் பெயர்ந்தாலோ குடியிருப்பாளர் பதிவு அலுவலகத்தில் இதைப் பதிவு செய்ய வேண்டும்.
நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) உள்ள நாடு அல்லது ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்தில் (EFTA உள்ள நாட்டைச் சேர்ந்தவர் அல்ல ஆனால் ஏற்கனவே சுவிட்சர்லாந்தில் வசிக்கிறீர்கள் எனில்:
நீங்கள் வேறு மாநிலத்திலிருந்து பாசில்-ஷ்டட் மாநிலத்திற்கு மாறுவதானால், செல்லும் முன் இடம்பெயர்வு அலுவலகத்தில் ஒப்புதலை பெறவும். அதன் பின்னரே இங்கு பதிவு செய்ய முடியும்.