அரசு அதிகாரம் ஒரு சில நபருக்கு தனிநபர்கள் அல்லது அமைப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடாது. அதனால் தான் சுவிட்சர்லாந்திலும் அதன் மாநிலங்களிலும் அரசு அதிகாரம் மூன்று சுதந்திர சக்திகளுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றம் (சட்டத்தை உருவாக்கும் அதிகாரம்), நிர்வாகிகள் (சட்டத்தை நிர்வகிக்கும் அதிகாரம்), மற்றும் நீதித்துறை (நீதித்துறை அதிகாரம்). Basel-Stadt மாநிலத்தில் பின்வரும் நிர்வாகங்கள் இந்த செயற்பாட்டை நடைமுறைப்படுத்துகின்றன:
- சட்டமன்றம்: மேல்சபை (Grosser Rat) (100 அங்கத்தவர், நான்கு வருடங்களுக்கொரு முறை மக்களால் தெரிவு செய்யப்படுவர்)
- நிர்வாகிகள்: ஆளுனர் சபை (Regierungsrat) (7 அங்கத்தவர், நான்கு வருடங்களுக்கொருமுறை மக்களால் தெரிவு செய்யப்படுவர்)
- நீதித்துறை : மாநில அளவிலான வேறுவேறு நீதிமன்றங்கள் (Gerichte).
Basel-Stadt இல் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது: மேல்சபை, ஆளுனர் சபை மற்றும் Basel-Stadt மாநிலத்தின் நீதிமன்றங்கள் பாசில் நகராட்சிக்கும் பொறுப்பாகும். ரீஹென் மற்றும் பெட்டிங்கன் ஆகிய இரண்டு நகராட்சிகளும் ஒரு சட்டமன்றம் (குடியிருப்போர் கவுன்சில், Einwohnerrat) மற்றும் ஒரு நிர்வாகி (நகராட்சி மன்றம், Gemeinderat) ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
கூட்டாட்சி மட்டத்தில் சட்டமன்றம் இரண்டு சபைகளைக் கொண்டுள்ளது: தேசிய சபை மற்றும் மாநில சபை (Nationalrat und Ständerat). தேசிய அரசாங்கம் (7 உறுப்பினர்கள்) ஃபெடரல் கவுன்சில் அல்லது கூட்டாட்சி சபை (Bundesrat) என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் தேசியரீதியிலும் பல்வேறு நீதிமன்றங்கள் உள்ளன. மாநில நீதிமன்றங்களின் முடிவுகளை உதாரணமாக உச்ச அதிகாரமாக ஃபெடரல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.