விரும்பி வேலை செய்தல் அல்லது தன்னார்வத் தொண்டு (Freiwilligenarbeit) மூலம் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உதவுகிறீர்கள். "தன்னார்வம்" என்றால் எந்த ஒரு பணத்தையும் நீங்கள் உங்கள் வேலைக்குக் கைமாறாகப் பெற மாட்டீர்கள். சுவிட்சர்லாந்தில் தன்னார்வத் தொண்டர்கள் குறிப்பாகக் கழகங்களில் பல பணிகளை மேற்கொள்கிறார்கள். நீங்கள் தன்னார்வத் தொண்டு செய்வதில் ஆர்வமாக உள்ளீர்களா? கலாச்சாரம், விளையாட்டு, சமூகப் பிரச்சினைகள், கல்வி, விலங்குகள் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அல்லது ஆரோக்கியம் போன்ற பல பிரிவுகளுக்கு நீங்கள் கழகங்களில் ஈடுபடலாம்.
நீங்கள் தன்னார்வத் தொண்டு மற்றும் பிற பணிகள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்:
- தன்னார்வப் பணிக்கான சிறப்பு அலுவலகம் GGG Benevol
- சுவிஸ் செஞ்சிலுவைச் சங்கம் Basel-Stadt (SRK)
- இரு பாசிலுக்குமான காரிடாஸ்
புகலிடப் பகுதி மற்றும் அகதிகளுக்கான பணிகள் பற்றிய தகவல்கள்:
- புகலிடத் துறையில் தன்னார்வப் பணிக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம்(KOFF)
- சுவிஸ் அகதிகள் உதவி