கலாச்சாரம்

Basel-Stadtல் பல கலாச்சார நிகழ்வுகள் உள்ளன. உங்களிடம் அதிக பணம் இல்லையென்றால், இலவச அல்லது மலிவான சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள பல்வேறு வழிகள் உள்ளன.

அருங்காட்சியகங்கள் / கண்காட்சிகள்

கிட்டத்தட்ட நாற்பது அருங்காட்சியகங்கள் கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளை வழங்குகின்றன. மேலும் நீங்கள் பல சிறிய காட்சியகங்கள் மற்றும் மாற்று கலை இடங்களையும் பார்வையிடலாம். பொது இடங்களில் பல கலை படைப்புகளையும் நீங்கள் கண்டறியலாம்.

இசை / நடனம் / நாடகம் / இலக்கியம்

Basel-Stadt மாநிலத்தில் பல கலாச்சார நிகழ்வுகள் உள்ளன. Theater Baselஇல் நீங்கள் ஓபரா, நாடகம், பாலே நடனம் மற்றும் Kaserneஇல் சமகால இசை, நடனம், தியேட்டர் ஆகியவற்றை அனுபவிக்க முடியும். Vorstadttheater அல்லது Sommercasino போன்ற சிறிய இடங்களும் உள்ளன. கோடையில் நீங்கள் பல மேடை நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களில் கலந்து கொள்ளலாம். சில நிகழ்வுகள் இலவசம்.

கட்டிடக்கலை

பாசில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீங்கள் பல நவீன கட்டிடக்கலைகளைக் கண்டறியலாம். உதாரணமாக, ரீஹனில், கட்டிடக் கலைஞர் ரென்சோ பியானோவின் Fondation Beyeler உள்ளது. பாசிலின் மையத்தில் கிறிஸ்ட் & கேண்டன்பீன் உருவாக்கிய Kunstmuseums Basel புதிய கட்டிடம் அல்லது புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட ஹெர்சாக் & டி மியூரானின் Stadtcasinos Basel உள்ளது.

கலாச்சார ஊக்குவிப்பு

நீங்கள் தொழிலில் ஒரு கலைஞராக இருந்தால், உங்கள் கலைதிட்டத்திற்கான நிதிக்கு விண்ணப்பிக்கலாம். கலாச்சாரத் துறையின் இணையதளத்தில் நீங்கள் எடுத்துக்காட்டாக நிதிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற தகவல்களைக் காணலாம்.

Kostenlose und vergünstigte Angebote

பல அருங்காட்சியகங்கள் மற்றும் நிகழ்விடங்களில் சிறப்பு சலுகைகள் உள்ளன. உதாரணமாக குறிப்பிட்ட காலங்களில் நீங்கள் குறைவான பணம் செலுத்தியோ அல்லது பணம் செலுத்தாமல் இலவசமாகவோ அனுமதிக்கப்படுவீர்கள். சில குறிப்பிட்ட நபர்களுக்குச் சேர்க்கை பெரும்பாலும் மலிவாகவோ அல்லது இலவசமாகவோ இருக்கும். இது தவிர பொது இடங்களில் இலவச கண்காட்சிகள் அல்லது திறந்தவெளியில் திருவிழாக்கள் உள்ளன. இடம்பெயர்வு துறையில் உள்ள பல கழகங்கள் (Vereine) மற்றும் நிறுவனங்கள் கலாச்சார சலுகையைக் கொண்டுள்ளன. KulturLegi,, குடும்ப அட்டை (Familienpass) அல்லது colorkey மூலம், பல மலிவான சலுகைகள் உள்ளன. நீங்கள் .தனியாக அருங்காட்சியகம் அல்லது நிகழ்வுக்கு செல்ல விரும்பவில்லையா? குழுக்கள் மற்றும் கூட்டாக செல்வோருக்குப் பல்வேறு சலுகைகள் உள்ளன. "கூட்டாக" என்றால்: நீங்கள் மற்றொரு நபருடன் நிகழ்வில் கலந்து கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.