Basel-Stadt பற்றிய விவரங்கள்

Basel-Stadt மாநிலம் சுவிஸிலுள்ள 26 மாநிலங்களில் (உறுப்பினர் மாநிலங்கள்) ஒன்றாகும். Basel-Stadt ஜெர்மனி மற்றும் பிரான்சின் எல்லை முக்கோணத்தில் அமைந்துள்ளது. இப்பகுதி வலுவான பொருளாதாரம், பல்வேறு கலாச்சாரம் மற்றும் உயர்ந்த வாழ்க்கைத் தரம் கொண்டுள்ளது.

எண்ணிக்கைகளும் உண்மைகளும்

Basel-Stadt மூன்று கிராம சபைகளைக் கொண்டுள்ளது: பாசில் நகர்ப்புறம் மற்றும் இரண்டு அரசியல் சமூகங்கள் (Gemeinden).ரீஹென் மற்றும் பெட்டிங்கன். இம்மாநிலத்தில்160 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200’000 மக்கள் வாழ்கிறார்கள். Basel-Stadt 37 கிமீ² பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. இது சுவிட்சர்லாந்தின் மிகச்சிறிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் ஆகும். ஆட்சி மொழி டொச்.

வரலாறு

Basel-Stadt மாநிலம் 1833 இல் நிறுவப்பட்டது. ஆனால் இது ஒரு இந்த சுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்டுள்ளது. மத்திய கற்காலத்திலேயே சுமார் 130,000ஆண்டுகளுக்கு முன்பே இங்கு ஒரு குடியேற்றம் இருந்திருக்கிறது. Basel மூலோபாய ரீதியாக அமைந்திருந்ததால், ரோமானியர்கள் கிமு.30க்கு முன்பு ம்யூன்ஸ்டர் மலையில் தங்கள் இராணுவத்தை நிலைநிறுத்தினர். இன்றும் அதே இடத்தில் பாசில் ம்யூன்ஸ்டர் இருக்கிறது. ம்யூன்ஸ்டர் ஒரு பிஷப் தேவாலயமாக இருந்தது மேலும் 1019இல் புனிதப்படுத்தப்பட்டது. அதனால்தான் பாசில் மாநில சின்னத்தில் ஒரு கோல் ஒன்றைக் காணலாம்: இது பிஷப்புகளின் கையில் இருக்கும் சிலுவையைக் குறிக்கிறது.

பாசில் பல்கலைக்கழகம் 1460 இல் நிறுவப்பட்டது. புத்தக அச்சடிப்பு மற்றும் மனிதநேயத்திற்கான மையமாக பாசில் வளர்ந்தது. 16ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் வடக்கு இத்தாலி மற்றும் பிரான்சிலிருந்து தப்பி ஓடிய பல புலம்பெயர்ந்தோர் இங்கு அடைக்கலம் புகுந்தனர். அவர்கள் பட்டு நெசவு மற்றும் பட்டு சாயமிடுதல் ஆகியவற்றை பாசிலுக்கு கொண்டு வந்தனர். இதிலிருந்துதான் இன்றைய மருந்து மற்றும் ரசாயன நிறுவனங்கள் தோன்றின. 1833 இல், Basel-Stadt மற்றும் Basel-Landschaft இராணுவ மோதல்களுக்குப் பிறகு பிரிந்தன. இன்று, Basel-Stadt மாநிலம் வாழ்க்கை அறிவியலை மையமாகக் கொண்டு கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்திற்கான மையமாகத் திகழ்கிறது.

சம்பிரதாயமும் பாரம்பரியமும்

Basel-Stadt மாநிலத்தில் நமக்கு மிகவும் முக்கியமான பல பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் உள்ளன. எங்கள் மரபுகளை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம். முதல் இடத்தில் ஃபாஸ்நாஹ்ட் (Fasnacht) உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் மூன்று நாட்கள் நடைபெறும். அதனால்தான் அவற்றை «drey scheenschte Dääg» – மூன்று சிறந்த நாட்கள் என்று அழைக்கிறோம். பாசிலர் இலையுதிர்கால கண்காட்சி (Herbstmesse) 500 ஆண்டுகளுக்கும் பழமையானது. மேலும் பாசிலர் கிறிஸ்துமஸ் சந்தையும் (Weihnachtsmarkt) ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பலர் ஒரு அணி, கழகம் அல்லது சமூகத்தில் உள்ளனர் கால்பந்து அணி எப் சி பாசில் கால்பந்து போட்டிகளில் பலர் கலந்து கொள்கின்றார்கள். மேலும் கோடையில் பலர் ரெயின் நதியில் நீந்துகிறார்கள்.